சிம்பு படத்துக்கு தொடங்கிய சிக்கல்… பிரபல தயாரிப்பாளர் போடும் முட்டுக் கட்டை!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தேசிங் பெரியசாமி கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை.
இதையடுத்து தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தைத் தொடங்குவதில் இப்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. முன்னதாக ஐசரி கணேஷிடம் தொடர்ந்து 3 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சென்றுவிட்டார். அதனால் தங்கள் கம்பெனிக்கு முடித்துக் கொடுக்காமல் வேறு கம்பெனி படத்தில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்துள்ளாராம்.