ஏப்ரல் முதல் புதிய படங்கள் வராது??: டி.ராஜேந்தர் அதிரடி நடவடிக்கை
ஏப்ரல் முதல் திரையரங்குகளில் புதிய படங்களை திரையிடப்போவதில்லை என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முயன்ற விழுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். திரையரங்குகளில் சினிமா பார்க்க பலமணி நேரங்கள் ஒரெ இடத்தில் அமர்ந்திருக்கும்போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் TDS வரி 10% பிடித்தம் செய்யப்படுவதை கண்டித்து ”தமிழகத்தில் மார்ச் 27 முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம்” என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். ஆனால் முன்னரே வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், புதிய படங்கள் வெளியாகாவிட்டால் மேலும் மக்கள் கூட்டம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.