சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:23 IST)

எல்லா படமும் அமேசான் ப்ரைமுக்குதான்! – ஓடிடியில் வெளியாகு சூர்யாவின் ஜெய் பீம்!

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள ஜெய்பீம் திரைப்படமும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது கூடவே 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான ராமன் ஆண்டாளும், ராவணன் ஆண்டாளும் படமும் அமேசான் ஓடிடியிலேயே வெளியாக உள்ளது.

ஜெய்பீம் எதிர்வரும் நவம்பர் மாதமும், ராமன் ஆண்டாளும், ராவணன் ஆண்டாளும் படம் செப்டம்பர் மாதமும் வெளியாக உள்ளன. சூர்யா நிறுவன படங்கள் தொடர்ந்து அமேசான் ஓடிடியில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.