பள்ளி திறப்பு விழாவில் கலந்துகொண்ட சூர்யா - ஜோதிகா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது மனைவி ஜோதிகா இருவரும் ஒரு பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சூர்யா நடித்து தயாரித்த படம் சூரரைப் போற்று இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் ஆஸ்கர் விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் சூரரைப் போற்று திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பாலமுரளியின் நடிப்பையும், இப்படத்தை கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
இப்படத்தின் வெற்றிக்குப் பின் சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துவருகிறார்.
சமீபத்தில் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளித் திறப்புவிழாவில் சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்டார்.
இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.