'காப்பான்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் உருவான காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் படம் 'சாஹோ' ரிலீஸ் காரணமாக, ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படலாம் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்ததை பார்த்தோம்.
இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது காப்பான் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது
இதன்படி 'காப்பான்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 'காப்பான்' ரிலீஸ் தேதி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது
சூர்யா, சாயிஷா, மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது