வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (16:22 IST)

20 ஆண்டுகால சினிமா வெற்றி பயணத்தில் சூர்யா!!

சூர்யா தனது சினிமா திரை பயணத்தில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை முடித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


 
 
கடந்த 1997 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார் சூர்யா. தனது தனித்திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
 
இதனால் தனது ரசிகர்களுக்கு சூர்யா டிவிட்டரில் பின்வருமாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான். 
 
உங்களுடைய (ரசிகர்கள்) கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்தது.... உங்களுடைய பாராட்டுக்கள் என்னுடைய தரத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தது.... நீங்கள் தப்பு என்று எனக்கு சுட்டிக்காட்டிய விஷயங்கள் எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது.... 
 
உங்கள் ஆதரவு என்னை சினிமாவை தாண்டி பயணிக்க வைத்தது (Agaram Foundation)… எல்லாவற்றையும் தாண்டி உங்கள் அன்பு தான் என்னுடைய என்ஜின் வேகமாக ஓட முக்கிய காரணம்... என்னுடைய கடந்த 20 வருட பயணத்தை நான் உங்களுக்கு சமர்பிக்கிறேன். 
 
இன்னும் பல மையில்கள் தாண்டி பயணிக்க வேண்டியுள்ளது... அனைவருக்கும் நன்றி.... என குறிப்பிட்டிருந்தார்.