வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:28 IST)

நாங்க எப்பவுமே சூர்யா பக்கம்தான்! – ட்ரெண்டாகும் #TNStandWithSuriya

நீட் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் மாணவர்கள் சிலர் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்று முடிந்தது. முன்னதாக நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சூர்யா ரசிகர்களும், நீட் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுப்போரும் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சூர்யாவின் அறிக்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.