சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? – சன் பிக்சர்ஸ் முக்கிய அப்டேட்!
சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சூர்யாவின் 40வது படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
இது சூர்யாவின் 40வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படாததால் சூர்யா 40 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஜூலை 22ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.