சூர்யாவுடன் ஜோடி சேரும் புதிய நடிகை! – சூர்யா 40 அப்டேட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 40வது படத்தில் அவருடன் முதன்முறையாக புது நடிகை ஒருவர் ஜோடி சேர உள்ளார்.
சூரரை போற்று படத்திற்கு பிறகு சூர்யா ஒப்பந்தமாகியுள்ள படத்திற்கு இன்னமும் தலைப்பிடப்படாத நிலையில் சூர்யா 40 என அழைக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க உள்ளார். படத்திற்கு இசை டி.இமான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக புதிய நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். பிரியங்கா மோகன் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்து சூர்யா படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.