புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (14:18 IST)

”கனவு நனவானது”... விக்ரம் படத்தில் நடித்தது பற்றி கமல் டிவீட்!

விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது.

இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் அவரின் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘சூர்யா இடம்பெற்றிருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டர்’ ஒன்றைப் பகிர இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகி விட்ட நிலையில் சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. படத்தின் இறுதியில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடித்தது குறித்து சூர்யா “ பிரியமுள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது….!?.. உங்களுடன் திரையில் தோன்றவேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது நடப்பதற்குக் காரணமாக இருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.