1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (09:23 IST)

சாய்பல்லவியின் ‘கார்கி’ படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா… வெளியான ரிலீஸ் தேதி!

சாய்பல்லவி நடிக்கும் ‘கார்கி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கார்கி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தை தற்போது சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

இதுபற்றி டிவிட்டரில் அறிவித்த சூர்யா சாய்பல்லவி உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது.