புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (10:45 IST)

“அந்த கதாபாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம்…” ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம் பற்றி சாய்பல்லவி நெகிழ்ச்சி!

சாய்பல்லவி நடித்த  விராடபர்வம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சாய்பல்லவி, ராணா, பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ள விரட்ட பருவம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது. கதாநாயகன் ராணாவை விட சாய்பல்லவிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து தற்போது 15 நாட்களுக்குள்ளாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இதுபற்றி அறிவிப்பை நெட்பிளிக்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் தனது கதாபாத்திரத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சாய்பல்லவி “விராட பர்வம் படத்தின் வென்னிலா கதாபாத்திரம் நான் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்திருக்கப் போகும் பாத்திரம். வெண்ணிலாவாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்தான்” எனக் கூறியுள்ளார்.