1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (18:49 IST)

மகனுடன் நடித்த படத்திற்கு பல கோடி வட்டி கட்டிய சூப்பர் ஸ்டார்!

aacharya
சூப்பர் ஸ்டார் தன் மகனுடன் இணைந்து நடித்துள்ள படத்திற்குப்பல கோடி வட்டி கட்டியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்  சிரஞ்சீவி. இவர் தன் மகன் ரம்சரணுடன் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. இப்படத்தை கொரட்டால சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை மேட்டினி எண்டர்டெயிண்மென்ட் மற்றும் கொனிடேலா ஆகிய நிறுவங்கள் தாயரித்துள்ளது.

இப்படத்தின்  ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளனர்.

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விழாவின்  பேசிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவி , கொரொன ஊரடங்கு காரணமாக பல மாதமாக படப்பிடிப்பு தாமதம் ஆனதால் சுமார் ரூ.50 கோடி வட்டி மட்டும் கட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். இப்பணத்தைக்கொண்டு ஒரு மீடியம் பட்ஜெட் படமேகூட எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.