சூப்பர் ஸ்டார் வெளியிடும் புதுப்பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவர் தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வரும் பொங்கல் தினத்தன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிகர் ஆதித் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டீசரை உலகமெங்கிலும் வரும் 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று காலை 10;06 மணிக்கு வெளியிடவுள்ளார்.
இப்படத்தை இயக்கியுள்ளவர் பிரபல ஹிட் பட இயக்குநர் கே.வி. குகன் ஆவார். பெரும்பாலும் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் சக நடிகர்களுக்கு நட்பின் நிமித்தமாக ஒருவருடைய படத்தை படத்தை மற்றவர் பாராடும்சுமூகமான சூழல் நிலவி வரும் நிலையில் இப்படத்தின் டீசரை மகேஷ் பாபு வெளியிடுவதால் மேலும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.