திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (22:09 IST)

விக்னேஷ் சிவனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னையில்  44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்   மற்றும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர்பாய்ண்ட் ரிசார்ட் என்ற ஃபைவ் ஸ்டார் ஓட்டல் இதற்கென அமைக்கப்பட்ட அரங்கில் நடபெற்று வருகிறது.

இப்போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். அவருக்க்ப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனை போனில் அழைத்து, அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
.

இதுகுறித்து, விக்னேஷ் சிவன், போனில் அழைத்து எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி சார்.  நிகழ்ச்சி முடிந்த பின்,எனக்கு உடனே அழைத்துப் பேசியதற்கு மகிழ்கிறேன்.  உங்கள் குரல் கேட்டதிலும் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அழகான தருணம் எனத் தெரிவித்துள்ளார்.