இவ்ளோ பெரிய ஹிட்டு கொடுத்துட்டு ஏன் சின்னப்படம்.. கலகலப்பு 3 –ஐ கைவிட்டாரா சுந்தர் சி?
சமீபத்தில் ரிலீஸான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்து அவர் கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த மாத இறுதியில் ஷூட்டிங்கை தொடங்க இருந்த நிலையில் இப்போது அரண்மனை 4 படத்தின் இமாலய வெற்றியால் கலகலப்பு 3 மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால் திரைக்கதையை இன்னும் மெருகேற்றலாம் என்ற முடிவை சுந்தர் சி எடுத்துள்ளாராம். அதனால் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அரண்மனை 4 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஏன் ஒரு சிறியப் படம் பண்ணவேண்டும் என சுந்தர் சி யோசிப்பதாகவும், அதனால் இப்போதைக்கு கலகலப்பு 3 படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சுந்தர் சி அடுத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை மாஸ் ஹீரோ ஒருவருடன் தொடங்குவார் என சொல்லப்படுறது.