வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (09:50 IST)

ரிலீசுக்கு முன்பே ரூ.28 வசூல் செய்த 'தளபதி 63'

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு முன்னணி தொலைக்காட்சி பெரும் போட்டியில் இறங்கியதாகவும், இந்த போட்டியில் சன் டிவி வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
 
ஆம், தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.28 கோடிக்கு பெற்றுள்ளதாக சற்றுமுன் வெளிவந்த தகவல் ஒன்று கூறுகின்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் 'தளபதி 63' படத்தின் படப்ப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ரூ.28 கோடி வசூலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், பேராசிரியையாக நயன்தாராவும் நடித்து வரும் இந்த படத்தில்  ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது