1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (15:46 IST)

இது வேற லெவல் இல்லை… இதுக்கு பேரே வேற வைக்கணும் – கர்ணன் டீசரை புகழ்ந்த இயக்குனர்!

கர்ணன் படத்தின் டீசரைப் பார்த்த இயக்குனர் சுப்ரமண்யம் சிவா அதனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் டீசரைப் பார்த்த இயக்குனர் சுப்ரமண்யம் சிவா அது பற்றி சமூகவலைதளத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவரது டிவீட்டில் ‘கர்ணன் டீஸரை பார்த்தேன், வேற லெவல் இல்லை. இதுக்குப் பேறே வேற வைக்கனும். உன் கர்ணன் எல்லோர் மனதையும் உலுக்காமல் விட மாட்டான். கர்ணன் மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.’ எனக் கூறியுள்ளார்.