திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (17:20 IST)

சுல்தான் படத்தைக் கைப்பற்றியதா முன்னணி ஓடிடி நிறுவனம்? எப்போது ரிலீஸ்?

கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள சுல்தான் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை மாஸ்டர் படத்துக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருந்தார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. ஆனால் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த முடிவுக்குக் காரணம் சுல்தான் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் உரிமைக் கோரியுள்ளாராம். அந்த பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுப்பதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து இப்போது சுல்தான் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மிகப்பெரிய தொகைக் கொடுத்து வாங்கியுள்ள நிலையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று ரிலிஸ் ஆக உள்ளதாம்.