புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 16 நவம்பர் 2019 (13:59 IST)

உதயநிதிய நான் பாத்ததே கிடையாது... அந்தர் பல்டி அடித்த ஸ்ரீ ரெட்டி!

உதயநிதி மீது குற்றம் சுமத்திய ஸ்ரீ ரெட்டி தற்போது உதயநிதியை நேரில் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார். 
 
தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அவ்வப்போது புகார்களை முன்வைத்து வந்துக்கொண்டிருக்கிறார்.
 
இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி கோலிவுட்டில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், லாரன்ஸ் உள்ளிட்ட பலரை பற்றியும் சில பல புகார்களை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிரடி பதிவை போட்டார். 
 
ஆனால் இப்போது நான் உதயநிதியை நேரில் பார்த்தௌ கூட இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி கூறியதாவது, உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது  இல்லை. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு அது. மேலும் அது எனது பேஸ்புக் பக்கம் இல்லை, போலியானது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, மிக விரைவில் அரசியலுக்கு வந்து தமிழகத்திற்கு சேவை செய்ய் காத்திருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என தெரிவித்துள்ளார்.