வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (22:15 IST)

'ஸ்பைடர்' படத்தை தாய்நாட்டுக்கு கொண்டு செல்லும் ஸ்டண்ட் இயக்குனர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முருகதாசிடம் இருந்த உதவி இயக்குனர்கள் பலர் தனியாக படம் இயக்க சென்றுவிட்டதாலே படத்தில் சரக்கு இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன



 
 
இந்த நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கை அடுத்து வியட்நாம் மொழியிலும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. வியட்நாம் மொழியில் இந்த படத்தை டப் செய்பவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன். தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்தாலும் அவருடைய சொந்த நாடு வியட்நாம்
 
தான் பணிபுரிந்த படம் தன்னுடைய தாய்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை அவருடைய தாய்மொழியில் டப் செய்கிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம்பெற்ற ரோலர்கோஸ்டர் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட இடம் வியட்நாம்தான். எனவே இந்த படம் வியட்நாம் மொழியிலும் ஹிட்டாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பீட்டர் ஹெய்ன்