புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (21:25 IST)

எஸ்.பி..பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரிக்கும் கொரோனா உறுதி !ரசிகர்கள் அதிர்ச்சி

எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அது மட்டுமின்றி அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும் அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

தற்போது, பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலைஅச்சப்படும் அளவிற்குமோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பியின் மகன் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில், நடிகர் மனோபாலா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் - சிகிச்சை பெற்று வரும் புகைப்படம். #SPB #PrayforSPB #SPbalasubramanyam சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐ.சி.யூ.வில் உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.