திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (16:22 IST)

தென்னிந்தியர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்- ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் முன்னணி நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், இசை   ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

பல உயரிய விருதுகள் , தேசிய விருது, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்தியர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறியுள்ளார்.

யூடியூப் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:   ''நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது எந்த வித சமூக அழுத்ததையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனம் படைத்தவர்கள் என்றும், வாழு வாழவிடு என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுகின்ற மக்கள்'' என்று கூறியுள்ளார்.