செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (13:18 IST)

நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமாவாகிறது!

விமான விபத்தில் மறைந்த பிரபல நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளும் படமாக எடுக்கப்போவதாக தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி தெரிவித்துள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளும் 1990-ல் கொடி கட்டி பறந்தவர் நடிகை சவுந்தர்யா. இவர் தமிழில் கார்த்திக் நடித்த பொன்னுமனி என்ற படத்தில் அறிமுகமாகி ரஜினி நடித்த அருணாச்சலம், படையப்பா படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அதேபோல் தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்தார்.
 
இவர் பெங்களூருவில் 2004ல் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு பெரிய இழப்பாக கருதப்பட்டது.
 
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளும் படமாக எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த நடிகை சாவித்திரியன் வாழக்கை வரலாறு படம் போலவே இந்தப்படமும் வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.