நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்


cauveri manickam| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (16:56 IST)
‘விஐபி 2’ படத்தின் புரமோஷனுக்காக மலேசியா சென்ற தனுஷ், நேற்று அங்கு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

 

 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கிறது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ள இந்தப் படத்துக்காக, ஊர் ஊராகச் சுற்றி புரமோஷன் செய்து வருகின்றனர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர். இந்தியாவைத் தாண்டியும் தனுஷுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால், வெளிநாட்டில் தமிழர்கள் வசிக்கும் இடங்களிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

எனவே, வெளிநாடுகளுக்கும் சென்று புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் தனுஷ். நேற்று, அவருக்குப் பிறந்தநாள். நேற்று மலேசியாவில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷுக்கு, பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் ரசிகர்கள். இந்தத் தகவலை தனுஷ் அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடன் கஜோல் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்தும் இருந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :