1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (07:22 IST)

விடுதலை 2 & கருடன் ரிலீஸ் எப்போது… நடிகர் சூரி அளித்த பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி  அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் சூரி. இதில் எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து சூரி தற்போது பேசியுள்ளார். மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் “கருடன் படப் பணிகள் முடிந்துவிட்டன. விடுதலை இரண்டாம் பாகத்துக்கு முன்பாகவே கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆகும்.” எனக் கூறியுள்ளார். முன்னதாக கருடன் திரைப்படத்தை மார்ச் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது சில வாரங்கள் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.