புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (14:27 IST)

சூர்யா ரசிகர்களுக்கு மொத்தமாக ஐந்து அப்டேட்டுக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

அஜித், விஜய் படங்களின் அப்டேட்டுக்களை அந்தந்த ரசிகர்கள் டுவிட்டரில் இணையதளத்தில் கேட்டுக் கெஞ்சி கொண்டிருக்கும் நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்களை சூர்யா அள்ளி தெளித்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளார்
 
முதல் அப்டேட்டாக சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், இன்றும் நாளையும் இன்னும் 4 அப்டேட்டுக்கள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாவது அப்டேட் இன்று மதியம் 2.30 மணிக்கும், மூன்றாவது அப்டேட் 3 மணிக்கும் நான்காவது அப்டேட் நாளை காலை 11 மணிக்கும் ஐந்தாவது அப்டேட் நாளை மாலை 5 மணிக்கும் அறிவிக்கப்பட உள்ளதாக சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
மேலும் நான் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது