புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (06:31 IST)

விவாகரத்து ஆன தனுஷ் பட நடிகைக்கு திருமணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

விவாகரத்து ஆன தனுஷ் பட நடிகைக்கு திருமணம்
தனுஷ் அறிமுகமான ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வால் அவர்களுக்கு இன்னும் 3 தினங்களில் திருமணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தனுஷூடன் காதல் கொண்டேன், சிம்புவுடன் கோவில், மற்றும் 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். சமீபத்தில் வெளியான ‘அயோக்யா’, ‘தடம்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இந்த நிலையில் தனக்கு இன்னும் 3 நாட்களில் திருமணம் என்பதை குறிக்கும் வகையில் ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சோனியா அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
 
நடிகை சோனியா அகர்வால், கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து அதன்பின் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.