வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (10:22 IST)

புனித் ராஜ்குமார் இறப்பால் சோ பேபி பாடல் ரிலீஸைத் தள்ளிவைத்த டாக்டர் படக்குழு!

டாக்டர் படத்தில் இடம்பெற்றிருந்த சோ பேபி பாடலின் வீடியோ நேற்று மாலை வெளியாவதாக இருந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 50 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் வரும் வியாழன் அன்று கேரளாவில் இந்த படம் ரிலீசாக இருப்பதாக மேலும் சில கோடிகள் வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த சோ பேபி பாடலின் வீடியோவை நேற்று இணையத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரணத்தை அடுத்து அதை தள்ளிவைத்துள்ளனர்.