திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (16:19 IST)

புனீத் ராஜ்குமாரின் இறுதி படத்துக்கு டப்பிங் பேசும் சிவராஜ்குமார்!

புனீத் ராஜ்குமார் நடித்துள்ள இறுதி படமான ஜேம்ஸ் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு முன்னர் நடித்த கடைசிப் படமான ஜேம்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. புனித் ராஜ்குமார் இந்த படத்தில் இராணுவ வீரராக நடித்துள்ளார்.

இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் புனீத் ராஜ்குமாரின் கதாபாத்திரத்துக்கு அவரின் அண்ணன் சிவராஜ் குமார் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளாராம்.