புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 மே 2022 (18:42 IST)

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ''டான்'' பட முக்கிய அப்டேட் !!

நடிகர் சிவகார்த்திகேயன் 'டான்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.
  

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள ‘டான்’ திரைப்படம் ‘டான்’. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. டான் திரைப்படம் வரும் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்ஸார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 43 நிமிடம் ஓடும் எனக் கூறப்படுகிறது.

இ ந் நிலையில் டான் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸாகும் எனவும்,இதனுடன் இப்படத்தின் ப்ரீ டிரெயிலர் நிகழ்வும் நாளை  நடைபெறும் என  நடிகர் சிவ கார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.