சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் டிரைலர் எப்போது? வெளியான தகவல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படமாக டான் உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படம் டான். இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. டான் திரைப்படம் வரும் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்ஸார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 43 நிமிடம் ஓடும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரிலீஸுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. மேலும் நாளை ரிலீஸுக்கு முன்பான ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றும் நடக்க உள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.