திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (14:07 IST)

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் உரிமைகளைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் பிரின்ஸ்

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆதித்யா மியுசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.