பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கும் சிவகார்த்திகேயன்… காரணம் இமான்தானா?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் சில தினங்களுக்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். அதில் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.
அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இது பற்றி நான் கேட்ட போது அவர் சொன்ன பதிலை இங்கு சொல்லவே முடியாது. அவர் செய்ததை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் சொல்லமுடியாது” என ஆதங்கத்தோடு கூறியிருந்தார்.
இமான் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், இணையத்தில் ரசிகர்கள் அதை ஒரு ஊகமாக புரிந்துகொண்டு சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர். இதனால் இப்போது சிவகார்த்திகேயன் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் சில மாதங்களுக்கு கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் சமீபத்தில் யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.