சவரக்கத்தி இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானமா?
மிஷ்கின் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் நடிப்பில் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கிய திரைப்படம் சவரக்கத்தி. இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதையடுத்து இப்போது டெவில் என்ற படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஆதித்யா அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.