மீண்டும் பிஎஸ் எத்திரன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? புதிய தகவல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹீரோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்
இந்த நிலையில் பிஎஸ் மித்ரன் இயக்கும் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பிஎஸ் மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பிசியாக இருப்பதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் திரும்பி வர கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகி விடும் என்றும் இதனால் இந்த இடைவெளியில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி விடலாம் என்று பிஎஸ் மித்ரன் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் - மித்ரன் மீண்டும் இணையும் இந்தப் படமும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஒரு சமூக கருத்தை கூறும் திரைப்படம் என்றும் அதிரடி ஆக்சன், ரொமான்ஸ் ஆகியவை இந்த படத்திலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது