வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (15:00 IST)

10 மில்லியனைத் தொட்ட சிம்டாங்காரன்

ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான விஜய்யின் சிம்டாங்காரன் பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.



விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெர்சல் படத்தினை அடுத்து இப்படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மானே இசையமைக்கிறார். தீபாவளி வெளியீடாக வர இருக்கும் இந்த படத்தின் இசை அக்டோபர் 2-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சிம்டாங்காரன் எனும் ஒரு பாடல் மட்டும் கடந்த 24-ந்தேதி வெளியானது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் இப்பாடல் தற்போது யூடியூபில் 10 மில்லியன்(1 கோடி) பாவையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் வார்த்தைகள் குழந்தைகளை கவரும் விதமாக உள்ளதாகவும் அதனால் குழந்தைகள் இப்பாடலை விரும்பிக் கேட்டும் பாடியும் வருவதாக தெரிகிறது.

மேலும் ஒரு தரப்பினர் மட்டும் வார்த்தைகள் புரியவில்லை எனவும் வழக்கமாக விஜய் பாடல்களில் இருக்கும் உற்சாகம் இதில் இல்லை என்ற எதிர்மறைக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.