செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (16:18 IST)

பிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்து நடிகை சிம்ரன் ட்வீட் செய்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் சிம்ரன் பங்கேற்கப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. 
இந்நிலையில் இதுகுறித்து சிம்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போகிறேன் என செய்திகள் வெளியாகியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னை வைத்து சிறப்பாக போட்டோ ஷாப் செய்திருக்கிறார்கள். நான் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, இனியும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவதும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிம்ரன் பிக்பாஸில் பங்கேற்கப்போகிறார் என்று பரவிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.