வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (17:20 IST)

மல்டி ஸ்டார்கள் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் சிம்பு தேவன்..

23ம் புலிகேசி என்ற பிரம்மாண்டமான படத்தை இயக்கியவர் சிம்புதேவன். இவர் விஜய்யை வைத்து  புலி என்ற படத்தை கடந்த 2015ம் ஆண்டு எடுத்தார். இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை. 

 
இப்போது சென்னை 28 படத்தில் நடித்த டீமுடன் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து  தயாரிக்க உள்ளன.
 
இதில் ஜெய், வெங்கட் பிரபு, சிவா, ப்ரேம்ஜி, ஜனனி ஐயர், அஜய் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். அக்டோபர் 2 வது வாரத்துக்கு பின் படத்தின் ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளது. இந்த படம் சிவாஜி கணேசனின் அந்த நாள் ஞாபகத்தை போல் 6 கதபாத்திரங்களில் நடிகர்கள்  நடிக்க உள்ளதாக  கூறப்படுகிறது.
 
பிரபல மியூசிக் டைரக்டர் இந்த படத்துக்கு இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.