திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (14:15 IST)

இதை செய்தால் சிம்பு எங்கேயோ போய்விடுவார் - விவேக்

நடிகர் சிம்பு இந்த 2 விஷயங்களை செய்தால் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றுவிடுவார் என காமெடி நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் மரணமடைந்தார். அவருக்கான நினைவு அஞ்சலி போஸ்டரை சிம்பு சுவற்றில் ஒட்டினார். அதை அவரின் ரசிகர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட சிம்புவின் ரசிகர்கள் இதுதான் சிம்பு, இவரைப் போல் வருமா? இவரிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது என டிவீட் செய்துள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.