டி ஆர் தொடங்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிம்பு செய்யும் உதவி!
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த டி ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி ராஜேந்தர் அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து இப்போது புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சங்கத்தை வலுப்படுத்தும் விதமாக சக உறுப்பினர்களிடம் தனது மகன் இலவசமாக ஒரு படம் நடித்துக் கொடுப்பார் என்று கூறியுள்ளாராம்.
அதன் மூலம் வரும் வருவாயை வைத்து சங்கத்தை வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளாராம்.