''வெந்து தணிந்தது காடு'' படத்தைப் பார்த்து மிரண்டுபோன சிம்பு.! என்ன செய்தார் தெரியுமா??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படம் மாநாடு. இப்படத்தை அடுத்து அவர் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு ஒரு தனி வீடு எடுத்து, அவர்களை அங்கு குடியமர்த்தி விட்டு, சென்னை திரும்பியுள்ள சிம்பு, வெந்து தணிந்தது படத்தைப் பார்திருக்கிறார். இயக்குனர் கவுதம் மேனனின் மேக்கிங் வீடியோவை பார்த்த அவர், மகிழ்ச்சி அடைந்து கவுதமை கட்டியணைத்து, புகழ்ந்து மீண்டும் அவரது படத்தில் மீண்டும் நடிக்க கால்ஷீட் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.