ஆர்யாவுக்கு வில்லனாகும் சிம்பு? அடிபடும் சரத்குமார் பெயர்!
சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பெரும் வெற்றி பெறாத நிலையில், அடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.
தற்போது லண்டக்கு தனது உடல் எடையை குறைப்பதற்காக சென்றுள்ளார். இதனிடையே ஹன்சிகா நடித்திருக்கும் மஹா படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ள தகவல் வெளியானது.
இந்நிலையில் சிம்பு கன்னட பட ரீமேக் ஒன்றி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த ரிமேக் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் ஸ்பெஷல் செய்தி.
ஆம், கன்னடத்தில் சிவராஜ்குமார், ஶ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என கூறப்படுகிறது. இந்த் படத்தின் ரீமேக்கில் சிம்பு வில்லனாகவும், ஆர்யா ஹீரோவாகவும் நடிக்கின்றனராம்.
இந்த படத்தில் நடிகர் சரத்குமாரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்கவுள்ளாராம். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.