சிம்பு பட பாடலுக்கு 100 மில்லியன் வியூஸ் ..ரசிகர்கள் மகிழ்ச்சி
சிம்பு படத்தின் ஹிட் பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் விஜய்யின் மாஸ்டர் படத்திற்குப் போட்டியாக பொங்கலுக்கு வெளியாகி நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக மாங்கல்யம் என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பாப்புலர் ஆனது.
இநிந்லையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 115 மில்லியன் பார்வையாளர்களைப் ( 11.5 கோடி) பெற்றுள்ளது. சிம்பு படத்தின் 100 மில்ல்யன் பார்வையாளர்கள் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.