வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (18:54 IST)

வெந்து தணிந்தது காடு’ படத்தின் சூப்பர் அப்டேட்!

vendhu
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 6:15 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.   இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே.