1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (19:18 IST)

சிம்புவின் ‘சிஎஸ்கே சிங்கங்கா’ பாடல் ரிலீஸ்!

சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’கொரோனா குமா’ என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிஎஸ்கே சிங்கங்களா என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. 
 
சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ள இந்த பாடலை லலித் ஆனந்த் என்பவர் எழுதியுள்ளார் என்பதும் ஜாவித் ரியாஸ் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கோகுல் இயக்க உள்ளார் 
 
இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் போட்டி தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த பாடல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடலில் சிஎஸ்கே அணியின் வீரர்களை புகழ்ந்து வரிகள் இருப்பதால் இன்றைய தினம் இந்த பாடல் வெளியாகி உள்ளது பொருத்தமானதாக கருதப்படுகிறது