திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (09:26 IST)

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் கொடுத்த தொகை!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 
 
அவரது சிகிச்சைக்கு ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி ஆகியோரும் நிதி உதவி செய்துள்ளனர் என்பது குறித்த தகவலை பார்த்தோம். அதுமட்டுமின்றி சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நடிகர் தவசி விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் சிம்பு தவசியின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி செய்தது செய்துள்ளார். இந்த தொகையை அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் நேரடியாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தவசி மற்றும் அவரது குடும்பத்தினர் நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்