செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (20:47 IST)

ஒருகிராம் தங்கம், வேட்டி சேலை: சிம்புவின் அதிரடி தீபாவளி பரிசு!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் சிம்பு நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே 
 
தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீபாவளி பரிசு சிம்பு வழங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
ஈஸ்வரன் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி உள்ளார் என்றும் துணை நடிகர்களும் துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை இனிப்புகலை சிம்பு  வழங்கினார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த தீபாவளி பரிசுகளைப் பெற்ற அனைவரும் சிம்புவுக்கு மனமார்ந்த நன்றியையும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும்போது தங்க நாணயம் கொடுப்பது விஜய், அஜித், ஆகியோர்களின் வழக்கம் என்பதும் அதே பாணியை சிம்புவும் பின்பற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது