வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:35 IST)

தேசிய விருது உறுதி… சிம்புவுக்கு நம்பிக்கை அளித்த கதை!

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மதியம் வெளியான நிலையில் சிம்பு ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். எரியும் காட்டில் பாலா பட ஹீரோ கணக்காக சிம்பு கோல் ஒன்றுடன் நிற்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தை ஒரு காதல் படமாக உருவாக்கதான் கௌதம் முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது அதிரடி ஆக்‌ஷன் கதையாக மாற்றியுள்ளரனாம். அதனால்தான் தலைப்பு கூட மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வெறுமனே ஆக்‌ஷன் கதையாக மட்டும் இல்லாமல் உணர்ச்சிபூர்வமான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கதையைக் கேட்ட சிம்பு தனக்கு கண்டிப்பாக ஒரு தேசிய விருது கிடைக்கும் என்ற உறுதியாக நெருங்கிய வட்டத்தினரிடம் சொல்லி வருகிறராம்.