வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (16:38 IST)

சிம்பு இவ்ளோ நல்ல பையனா மாறிட்டாரே! – மகிழ்ச்சியில் மாநாடு குழு

பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது மாநாடு ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

நடிகர் சிம்புவுக்கு தற்போது தமிழக அளவில் பல ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், கடந்த காலங்களில் அவரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை வைத்து படம் இயக்குவதை தவிர்த்து வந்தனர்.

படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமலே இருப்பது, படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த சொல்வது என தொடர்ந்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அனைத்தையும் தாண்டி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காவது ஒழுங்காக செல்வாரா என சினி வட்டாரங்களில் கேலியாக பேசப்பட்ட நிலையில், முன்பு போல் இல்லாமல் ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் சிம்பு. 10 மணிக்கு வர சொன்னால் 9 மணிக்கே சிம்பு ஆஜராகி விடுவதால் படத்தை சீக்கிரமே முடித்து விடலாம் என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் மாநாடு படக்குழுவினர்.